Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரிசிக்கான வரியை அரசாங்கம் குறைத்துள்ள நிலையில், ஒரு கிலோக்கிராம் அரிசியை 65 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடிவும். ஆனாலும், மொத்த வியாபாரிகள் அதிக விலைக்கே அரிசியை தொடர்ந்தும் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், வரி குறைப்பின் பலன் மக்களைச் சென்று சேரவில்லை என்று நீதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “அரிசிக்கான விசேட பண்டங்கள் வரி குறைக்கப்பட்டுள்ளபோதும் அதன் பிரதிபலன் நுகர்வோரைச் சென்றடையவில்லை. ஒரு சில அரிசி மொத்த விற்பனையாளர்களின் மோசடிச் செயற்பாடுகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் தனியார் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது. அது மாத்திரமன்றி அரிசிக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டங்கள் வரி ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்புரைக்கு அமைய குறைக்கப்பட்டது. இரண்டு கட்டங்களாக இவை குறைக்கப்பட்டன. முதலில் ஐந்து ரூபாய் குறைக்கப்பட்டது. நான்கு நாட்களுக்கு முன்னர் மேலும் 10 ரூபாவுக்கு குறைக்கப்பட்டது.

வரி குறைக்கப்பட்ட பின்னர் ஒரு கிலோக்கிராம் அரிசியை 65 ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடியதாக இருக்கின்றபோதும், மொத்த விற்பனையாளர்கள் கூடிய விலைக்கே விற்பனை செய்கின்றனர். அரசாங்கத்துக்கான வருமானம் இழக்கப்பட்டாலும், அதன் பிரதிபலன் நுகர்வோரைச் சென்றடையவில்லை. இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையும் முயற்சிகளை எடுத்துள்ளது.

நான்கு நாட்களில் இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய முடியும். இதுவரை 23800 மெற்றின் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மொத்த அரிசி விற்பனையாளர்கள் தமது இருப்பிலிருந்த அரிசியை பதுக்கியிருப்பதால் அரிசியின் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே வர்த்தகர்கள் அரிசியை பதுக்காது வரி குறைப்பின் பிரதிபலனை நுகர்வோருக்கு வழங்க வேண்டும். மோசடியான முறையில் செயற்படும் அரிசி வர்த்தகர்கள் நியாயமாக நடந்துகொள்வதற்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to அரிசிக்கான வரி குறைப்பின் பலன் மக்களைச் சென்று சேரவில்லை; மொத்த வியாபாரிகள் மோசடி: ரவி கருணாநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com