கழிவுகளை வாளிகளில் அகற்றுவதற்கு கடல் என்ன கிணறா என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். கடலில் எண்ணெய் அகற்றும் பணி மிகவும் மெதுவாக நடக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகார் தெரிவித்துள்ளார். மேலும் புதிய நவீன கருவிகளை வாங்கி எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதற்கிடையில்,எண்ணூரில் கடலில் கலந்த எண்ணெய் அகற்றும் பணி குறித்து மக்களவையில் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
எண்ணூரில் எண்ணெய் கசிவுக்கு காரணமான 2 கப்பல்களை சிறைபிடிக்க கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மனுதாரரே தெரிவித்ததால் வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கடலோர காவல்படை, தமிழக அரசு இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

0 Responses to கழிவுகளை வாளிகளில் அகற்றுவதற்கு கடல் என்ன கிணறா?: விஜயகாந்த்