உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தாது போனால், நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்புக்கு கூட்டு எதிரணி (மஹிந்த அணி) ஆதரவு வழங்காது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கூட்டு எதிரணி வெற்றிபெறும் என்பதையும், அரசாங்கம் தோல்வியடையும் என்பதையும் தெரிந்தே தேர்தலைப் பிற்போட்டு வருகின்றனர். நாளை (இன்று) கூட்டு எதிரணியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதுடன்,அரசியலமைப்புச் சபை உப குழுக்களிலிருந்து விலகுவதற்கும் தீர்மானம் எடுக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to உள்ளூராட்சித் தேர்தலை நடாத்தாவிட்டால் புதிய அரசியலமைப்புக்கு கூட்டு எதிரணி ஆதரவளிக்காது: மஹிந்த