தென்சீனக் கடற்பரப்பில் தைவானும் வியட்நாமும் சொந்தம் கொண்டாடி வரும் டிரைடான் என்ற தீவினை சீனா ஆக்கிரமித்துள்ள நிலையில் அத்தீவுக்கு அண்மைய கடற்பரப்பில் மற்றுமொரு தடவை அமெரிக்க போர்க் கப்பல் சென்றுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சீனா அமெரிக்காவுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்ததுடன் இது முறையற்ற செயல் என்றும் குறித்த கடற் பிராந்தியத்தில் சீனாவுக்கு உரிய இறையாண்மையை மதிக்காது இது போல் இனி நடக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
பதிலுக்கு அமெரிக்க இராணுவ அதிகாரிகளோ குறித்த கடற்பரப்பு சர்வதேச கடல் வழியாகும் என்றும் இதில் எல்லா நாட்டுக் கப்பல்களும் சுதந்திரமாகப் பயணிக்க முடியும் என்ற அடிப்படையில் தான் எமது போர்க் கப்பலும் பயணித்தது என்றும் விளக்கம் அளித்துள்ளனர். தென் சீனக் கடல் பகுதிகளில் உள்ள பல இயற்கையான மற்றும் செயற்கையான குட்டித் தீவுகளில் அதிகளவு எண்ணெய் மற்றும் கணிய வளம் இருப்பதால் அவை முக்கிய வர்த்தக மையங்களாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பரப்பில் மறுபடியும் அமெரிக்க போர்க் கப்பல்! : கடும் கோபத்தில் சீனா