Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஞாயிற்றுக்கிழமை சீனாவின் 7.5 டன் எடையுடைய அதிநவீன செயற்கைக் கோளான ஷிஜியான் 18 ஐ சுமந்து சென்ற லோங் மார்ச் 5y2 என்ற ராக்கெட் ஹைனான் மாகாணத்தின் வென்சாங் இலிருந்து புறப்பட்ட சற்று நேரத்தில் விண்ணில் வெடித்துச் சிதறியுள்ளது.

சுமார் 25 டன் எடை வரையிலான செய்மதிகளை சுமந்து செல்லக் கூடிய இந்த ராக்கெட்டு செயலிழந்து வெடித்துச் சிதறியிருப்பது கடந்த சில வாரங்களில் இது 2 ஆவது முறையாகும். காலை 7:23 இற்கு புறப்பட்ட குறித்த ராக்கெட்டு ஏந்திச் சென்ற செயற்கைக் கோளான ஷிஜியான் 18 ஒரு தகவல் தொடர்பு செய்மதி ஆகும். பூமியில் இருந்து புறப்பட்ட 45 நிமிடங்களில் ஏற்பட்ட இந்த விபத்து ராக்கெட்டு திட்டமிட்ட பாதையில் செல்லாது விலகியதால் உண்டானது என்று அறிவிக்கப் பட்ட போதும் தற்போது விபத்துக்கான உண்மையான காரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப் படுகின்றது.

2016 இல் கூட ஷிஜியான் 17 செய்மதியை முறையான ஒழுக்கில் செலுத்தத் தவறிய போதும் லோங் மார்ச் 5 சீனாவின் மிகச் சக்தி வாய்ந்த செய்மதியாக விளங்குகின்றது. சீனாவின் அடுத்த விண்வெளி செயற்திட்டமாக நவம்பரில் லோங் மார்ச் 5 ராக்கெட் மூலம் நிலவுக்கு சாங்கே 5 என்ற செய்மதி செலுத்தப் படுகின்றது. நிலவுக்கு செல்லும் சீனாவின் 2 ஆவது விண்கலம் இது என்பதுடன் கடந்த 40 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக அங்கிருந்து மண் மாதிரிகளை எடுத்து வரும் முதல் விண்கலமாகவும் சாங்கே 5 பெயர் பெறுகின்றது.

0 Responses to சீனாவின் அதிநவீன செயற்கைக் கோளை சுமந்து சென்ற ராக்கெட்டு வெடித்துச் சிதறியது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com