இன்று திங்கட்கிழமை தெற்கு ஜேர்மனியில் ஒரு சுற்றுலா பேருந்து டிரைலர் டிரக் வண்டி ஒன்றுடன் மோதி தீப்பிடித்து விபத்தில் சிக்கியதில் 18 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது.
சுமார் 48 பேர் பயணித்த இந்த பேருந்தில் தீக்காயம் அடைந்த ஏனைய 30 பேரும் உடனடியாக வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப் பட்டதுடன் இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. காலை 7 மணிக்கு சற்று நேரம் கழித்து தெற்கு ஜேர்மனியின் ஸ்தம்பாஹ் இலுள்ள பவாரியன் நகருக்கு அருகே A9 பாதையில் வாகன நெரிசலுக்கு மத்தியில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து நிகழ்ந்த பகுதியில் இருந்து சற்றுத் தொலைவில் தான் செக் நாட்டு எல்லை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விபத்தில் சிக்கிய பேருந்தில் எத்தகைய சுற்றுலாக் குழு பயணித்தது என்பது குறித்தும் உடனடித் தகவல் இல்லை. அண்மைய வருடங்களில் ஜேர்மனியை உலுக்கிய மிக மோசமான சாலை விபத்தாகக் இது கருதப் படுகின்றது. ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டாலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிய வருகின்றது.

0 Responses to ஜேர்மனியில் சுற்றுலா பேருந்து விபத்தில் 18 பேர் பலி என அச்சம்